Demolition, protesting to arrest people who damaged the Ambedkar statue near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் காலனியின் முன்புறம் உள்ள அம்பேத்கார் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சமுக விரோதிகள் சேதபடுத்தி விட்டார்கள். இதைத் தொடர்ந்து 3 நபர்களை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் பெரம்பலூர் மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சி செயலாளர் தமிழ்மாணிக்கம், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்திய அனைத்து நபர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கோரி அத்தியூர் – பெரம்பலூர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும், அம்பேத்கார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த மங்களமேடு டிஎஸ்பி தேவராஜ், காவல் ஆய்வாளர் ஈஸ்வரன், உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் அனைத்து நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், சமாதானம் அடைந்த கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் அத்தியூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இளமுகில், கரிகாலன், ராணி, கார்மேகம், முத்துசாமி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!