Defense Minister Nirmala Ramanathapruram review of Vision 2022 project

ராமநாதபுரம் மாவட்டம் விஷன் 2022 திட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கக்ஷட்ட அரங்கில் ராமநாதபுரம்மாவட்டம் விஷன் 2022 திட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது ெதாடர்பாக நடந்த அனைத்து துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் மத்திய வழிகாட்டு அலுவலர்/மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருமான கோபாலகிருஷ்ணன், மாநில வழிகாட்டுதல் அலுவலர் உணவுபாதுகாப்பு துறை ஆணையாளருமான அமுதா, மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்பி அன்வர்ராஜா, காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியார் முன்னிலை வகித்தனர்

இந்திய அரசு அறிவித்துள்ளபடி 2022ல் முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களை கண்டறிந்து அவற்றின் சமுக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கக்ஷட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வு கக்ஷ்ட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்தார்கள்.

குறிப்பாக ஊரக பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தி தனிநபர் இல்ல கழிப்பறைகள் பயன்பாட்டினை அதிகரித்து முழு சுகாதார மாவட்டமாக அறிவிப்பு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொது மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றவும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதுதவிர மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருமு் மண்வள அட்ைடகள் வழங்கும் திட்டம் குறித்தும், குறைந்த நீர்பாசனத்தில் அதிக மகசுல் ஏற்படுத்தும் வேளாண் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சுகாதார துறையின் முலம் பிரசவத்தின் போது ஏற்படும் சிசு மரணம், மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் முத்ரா திட்டத்தின் கீழ் சிறு தொழில் புரிவோர்களுக்கு வங்கிகளின் முலம் கடனுதவி வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மக்கள் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக கொண்டு சேர்த்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார். ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் வங்கிகளில் பிணையம் இல்லாமல் கடன் வழங்கிடும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ள முத்ரா திட்டத்தினை வங்கிகள் சிறப்பாக முறையில் செயல்படுத்தி இத்திட்டத்தின் பலன் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விஷன் 2022 திட்டத்தின் கீழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து துறைகளும் நடைமுறைப்படுத்திடும் திட்டங்கள் செம்மைப்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி மேற்குறிப்பிட்டவைகளை மேம்படுத்தி ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கணக்கிடப்பட்டு தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக்குதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆய்வு கூட்டத்தில் மீன்வளர்த்துறை கூடுதல் இயக்குனர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பரமக்கு சப் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. பேபி உட்பட பலர் பங்கேற்றனர்.

பின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டன. இதுகுறித்து 3 மாதகாலத்திற்குள் ஆய்வுஅறிக்கை தயாரிக்கப்பட்டு வளர்ச்சியடைய தேவையான திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயணிகள் விமானநிலையம் கொண்டு வருவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும், என்றார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு உச்சிப்புளியில் ஐஎன்எஸ் பருந்து விமானதளம் அமைந்துள்ள இடத்தில் பயணிகள் விமான நிலையம் கொண்டு வரவேண்டும் என நான் ஏற்கனவே துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

கடிதமும் எழுதி உள்ளேன். மருத்துவ கல்லுாரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பது போல் கண்டிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் கொண்டு வர தொடர்ந்துநான் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவேன், என்றார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!