Course schedules can be implemented by School Education, the teachers decided to adopt action plans

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோனை கூட்டம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் கே.மகேந்திரன் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஆர்.சி.ஆர் கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவரும், மாவட்ட செயலாளர், இ. ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆர். செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டத் தலைவர் ஜி. ராமமூர்த்தி, தமிழ்நாடு மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டத் தலைவர் எம்.டி.ராஜேந்திரன், முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் நா.ரெங்கராஜன், ஏ.ஐ.எஃப்.இ.டி.ஓ தேசிய செயலாளர் வா.அண்ணாமலை, மிழ்நாடு மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலத் தலைவர் பெ.இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்காளக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தும் பாட கால அட்டவணை மற்றும் பிற செயல் திட்டங்களை மற்ற மாவட்டங்களில் செயல்படுத்துவதை போலவே பெரம்பலூர் மாவட்டத்திலும் செயல்படுத்த வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பலமுறை கோரிக்கை விடுத்தும், தீர்வு கிடைக்காததால், கடந்த ஜுன் 29ம் தேதி ஆயிக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்பபாட்டம் நடத்தினர். ஆனால், இது நாள் வரை முழுமையான தீர்வு எட்டப்படாமல் உள்ளதால், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு, ஆகஸ்ட் மாதத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரும் ஆக.1 முதல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் படியோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கையேட்டின் படியோ செயல்படுவது இல்லை என்றும் இதன் அடிப்படையில் நடவடிக்கை ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கூட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!