Completion of the Census of Nullifying the school children in the districts of Perambalur and Ariyalur

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் 2018-19 ஆம் ஆண்டு 6 முதல் 14 வயது மற்றும் 15-18 வயது வரையிலான பள்ளிச் செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் 0-18 வயது வரையிலான மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணகெடுப்புப்பணி 16.04.2018ல் தொடங்கி 28.05.2017ல் நிறைவுபெற்றது.

இக் கணக்கெடுப்புப் பணி தொடங்குவதற்கு முன்னதாகவே, பார்வையிடப்பட வேண்டிய குடியிருப்புப் பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்துப்பட வேண்டிய குடியிருப்புப்பகுதிகள் விடுபட்டக் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சில முன்னேற்பாடுகளை செய்தல் பொருட்டு மாவட்ட அளவிலான முதற்கூட்டம் சார்ந்த வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள், பள்ளிச் செல்லா, இடைநின்ற உள்ளடயங்கியக்கல்வி மற்றும் பள்ளித் தகவல் சார்ந்த உட்கூறினை கண்காணிக்கும் ஒருங்கிணைப்பாளுக்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

10 ஒன்றியத்தில் 1174 குடியிருப்புப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இக் கணகெடுப்பு பணி குறித்த முன் திட்டமிடல் கூட்டம் சார்ந்த மாவட்ட ஆட்சியர் பெரம்பலுhர் மற்றும் அரியலுhர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவிதிட்ட அலுவலர் அனைவருக்கும் கல்வி இயக்க மற்றும் இடைநிலைக்கல்வி திட்டம், சைல்டு லைன், மாவட்ட ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலவலர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ,மாவட்ட சுகாதரத்துறை அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் , மாவட்ட குழந்தை தொழிலாளர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கொண்டு ஆலோசித்ததோடு, இக்கணகெடுப்புப்பணிகளுக்கென அவர்களது பங்களிப்பினை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து வட்டார அளவில் உதவிஃகூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்ஃமேற்பார்வையாளர்கள் தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கணக்கெடுப்புப் பணிக்கான கால அட்டவனை தயார் செய்து, அதனடிப்படையில் அனைத்து குடியிருப்புப் பகுதிகளையும் பார்வையிடவும் அங்காடிகள், புதிய குடியிருப்புப் பகுதிகள், கல் குவாரிகள் தொழிற்சாலைகள் விவசாய நிலங்கள் ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளில் கட்டாயம் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் , ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் உதவியோடு இப்பணியானது மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியர் பயிற்றுநர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளை பார்வையிட்டு தொடர்ந்து 15-21 நாட்கள் வருகை தராத மாணவர்களின் விவரங்களையும், இடைநின்ற மாணவர்களின் விவரங்களையும் சேகரித்தனர்.

ஒவ்வொரு வாரமும் கண்டறியப்பட்ட பள்ளிச்செல்லாஃஇடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடையக் குழந்தைகள் விவரங்களை தொகுத்து மாநிலத் திட்ட இயக்குநர் அனைவருக்கும் கல்வி இயக்க சென்னை-6 அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இக் கணக்கெடுப்புப் பணியில் குறித்த விவரங்கள் சார்ந்த வட்டார வள மையம் மூலமாக பத்திரிக்கை செய்தி வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!