Companies may apply for training of ITI students: Namakkal Collector

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இப்பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் 10ஆயிரம் பேருக்கு அளிக்கப்படும். பயிற்சி காலம் 3 மாதங்கள். ஒரு பயிற்சியாளருக்கு பயிற்சி அளிக்க தினமும் ரூ.38 வீதம் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். இது தொடர்பான விவரங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் இன்டர்நெட் முகவரியில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கமிஷனர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு இஸ்மத்பானு, மாவட்ட உதவி இயக்குநர் (பொ), மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!