Collector, who is waiting for MPs, MLAs and Disabled people! Public pain

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தாக-விற்றகாக மேடையில் காத்திருக்கும், எமஎல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.பி ஆர்.மருதைராஜா,, மற்றும் அலுவலர்கள்


பெரம்பலூரில், நேற்று நடக்க வேண்டிய அனைத்து மாற்றுத் திறனாளிகள் தினவிழா, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிற்காக ஒத்தி வைக்கப்பட்டு இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கலந்து கொண்டு, தலைமையேற்று, விழா பேரூரையாற்ற இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் மண்டபத்தில், இன்று காலை பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்ள வருகை புரிந்து இருந்தனர். கலைநிகழச்சிகள் நிகழ்த்த மாற்றுத் திறனாளியான சிறுவர் வேடமிட்டு காத்து கொண்டிருந்தனர்.

உரிய நேரத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.பி ஆர். மருதைராஜ் உள்ளி அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்காக மேடையில் காத்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் பல மாற்றுத்திறனாளிகள் உற்சாகம் இழந்து காணப்பட்டனர். மேலும், அவர்களின் பெற்றோர்கள் பலர் வெறுப்புற்ற நிலையில் காணப்பட்டனர்.

ஆனால், அதிகாரிகளோ மாவட்ட ஆட்சியரின் கால தாமத்தை மூடிமறைக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி முடிவுற்றவுடன், அரங்கத்தில் இல்லாத கலெக்டரை வரவேற்றதுதான் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.

கலெக்டர் வே.சாந்தோ, சுமார் அரைமணி நேரம் காலதாமத்திற்கு பின்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியை உரிய காலத்தில் நடத்தாமல், அதையும் ஒரு நாள் ஒத்தி வைத்து, அதிலும் காலதாமதம் செய்வதுடன், மாற்றுத்திறனாளிகளையும் காக்க வைக்க வேண்டுமா? என்பது அனைவரின் கேள்வி?


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!