clean india campaign

பெரம்பலூர் : காதாரம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கட்டுரைப்போட்டி மற்றும் குறும்படப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூலம் (Ministry of Drinking Water and Sanitation) இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா;வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் சார்பில்; கட்டுரைப்போட்டி மற்றும் படப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொது மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டுரைப் போட்டியில் “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பிலும்,

படப்போட்டிக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரையுள்ள கால அளவில் “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு” என்ற தலைப்பிலும் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்டவா;கள், 18-60 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சிறப்பு வகைப் பிரிவினர்(மாற்றுத்திறனாளிகள்) பிரிவில் இருபாலரும் (ஆண் – பெண்) கலந்து கொள்ளலாம். மேற்படி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு 02.10.2017 அன்று “தூய்மை பாரத இயக்கம்” விருது, மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவில் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் ஒரு கட்டுரை மற்றும் குறும்படம் மண்டல மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கட்டுரைப்போட்டி மற்றும் குறும்படப் போட்டிகள் கிராம அளவில் 04.09.2017 அன்று 10.30 மு.ப. முதல் 1.00 பி.ப. வரையும்,

வட்டார அளவில் 06.09.2017 அன்றும், மாவட்ட அளவில் 08.09.2017 அன்றும், மாநில அளவில் 10.09.2017 அன்றும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளான அளவில் மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்று சுகாதாரம் குறித்த தங்கள் கருத்துகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!