Christmas ceremony at Muthupettai causanel college

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளைஞர் தினவிழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஜேசுதாஸ் தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.

முத்துப்பேட்டை பாதிரியார் அந்தோணிராஜ் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிராஜ், இன்பென்ட் ஜீசஸ் பள்ளி முதல்வர் ஸ்டீபன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்களின் குழு நடனம், கோலப்போட்டிகள், நாடகம், மெகந்தி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றனர்.

ராமநாதபுரம் மகாராஜா ஜவுளி ஸ்டோர் நிறுவனத்தின் மேலாளர் முகம்மது ஒலி, சுரேஷ்பாண்டியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். மாணவி ஆனந்தப்ரியா நன்றி தெரிவித்தார்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!