Case filed against 68 companies, not offering holidays for workers in Namakkal on Republic Day

நாமக்கல் பகுதியில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 68 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேசிய விடுமுறை சட்டத்தின்படி ஜன.26 குடியரசு தினத்தன்று கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வர்த்திக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இதற்காக விடுமுறை தினத்தில் பணிபுரியும் பணியாளர்கள் குறித்த விபரங்களை அவர்களின் சம்மதத்துடன் 24 மணி நேரத்திற்கு முன்பாக உரிய படிவத்தில் சம்மந்தப்பட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

இந்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து சென்னை தொழிலாளர் துறை கமிஷனர் நந்தகொபால், கோவை கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி. குன்னூர் தொழிலாளர் இணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி நாமக்கல் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் நாமக்கல் பகுதியில் உள்ள 26 கடைகள், 50 ஹோட்டல்கள் மற்றும் 50 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட 88 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் 68 நிறுவனங்களில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேசிய விடுமுறை நாளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் திருஞானசம்பந்தம், சுதா. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதா, கோமதி, சாந்தி, விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய விடுமுறை நாட்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் அரசு விதிமுறைகள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!