By Staff Welfare Board of Ulama and other welfare payments, pensions apply; Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் (ம) இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்ஹாக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், இவ்வாரியத்தால் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

உலமா நலவாரிய அட்டை பெற்ற உறுப்பினர்கள் தங்கள் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும்.

உலமா அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச் சடங்கு உதவித் தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரிய உறுப்பினர்கள் 60 வயது பூர்த்தியடைந்த உடன் உலமா ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பித்து உலமா அட்டைகள் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம், ஓய்வூதியம் பெறவும் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!