Breastfeeding for children is declining: Information in Thanjavur Seminar.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேர்ரங்கில் தாய்ப்பால் ஊக்குவிப்போர் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சோமசேகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது ஆண்டுக்கு குறைந்து வருகிறது பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்ற தவறான எண்ணத்தால் கொடுப்பதில்லை, ஆனால், உண்மையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தான் அழகும் உடல் பருமனும் குறையும் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதால் உதிரப்போக் தடைபட்டு தாயின் உயிரே காக்கப்படும் விளம்பரங்களை பார்த்து அடைக்கப்பட்ட பால்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என வரும் அனைத்துப் பொருட்களும் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும். எனவே, விளம்பரங்களை நம்பி குழந்தைகளுக்கு உணவு பால் பொருட்களை வாங்கித் தரக்கூடாது.

தாய்ப்பால் அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளே சிறந்த தலைமுறையாக எதிர்காலத்தில் வருவார்கள் என் பேசினார்.

இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சிங்காரவேலு, தாய்ப்பால் கூட்டமைப்பு உலகநாதன் செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் செந்தமிழ்செல்வி மருத்துவத்துறை இணை இயக்குநர் மலர் விழி பயிற்சி செவிலியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!