Birth Death Registration Certificate in Perambalur – Siruvachur VAO office: DRO Inspection

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிறப்பு இறப்பு பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி நேற்று பார்வையிட்டார்.

பிறப்பு இறப்பு பதிவிற்காக 01.10.2017 முதல் தமிழகம் முழுவதும் ஒரே மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்முறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் படி நகராட்சி, பேரூராட்சி, பொதுசுகாதாரம் மற்றும் வருவாய் துறை ஆகிய அனைத்து துறைகளும் ஒரே பொதுவான மென்பொருளின் மூலம் பிறப்பு இறப்பு பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு பிறப்பு இறப்பு பதிவுகள் பொதுவான மென்பொருள் gccapp.chennaicorporation.gov.in – இல் பதிவு செய்யப்பட்டு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிறப்பு, இறப்பு, குழந்தை இறப்பு பதிவுகள் சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலரால் பதிவு செய்யப்பட்டு பிறப்பு இறப்பு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பிறப்பு இறப்பு பணிகளை மேற்கொள்ள சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகம் கணிணி மற்றும் பிரிண்டரை இலவசமாக வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை கல்லூரியின் இருக்கை மருத்துவர் பானுமதி, மேலாளா அம்மாபாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன், சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!