Behalf the election, ban the papers and posters without the printing Press name

பெரம்பலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ அச்சக வெளியீட்டாளர்களை அனுகி தேர்தல் பிரச்சாரத்திற்காக வாக்காளர்களை கவரும் வகையில் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் ஆகியனவற்றை அச்சடிக்க வாய்ப்புள்ளது.

அத்தகைய துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்களில் கட்டாயம் அச்சகத்தின் பெயரும், முகவரியுடன் எவ்வளவு எண்ணிக்கையிலான பிரசுரங்கள் அச்சடிக்கப்படுகின்றன என்ற விபரம் இடம்பெற்று இருக்க வேண்டும்.

மேலும், இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 127ஏ ன்படி எந்த ஒரு நபரும், அச்சகத்தின் விபரம் இல்லாமல் துண்டுபிரசுரங்கள், போஸ்டர;கள் வெளிட அனுமதியில்லை என்றும், அவ்வாறு தேர;தல் பிரசுரங்கள் வெளியிடும் அனைத்து நபரும் இச்சட்டப்பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டவாறு இரண்டு உள்ளூர் சாட்சிகளின் கையொப்பமிடப்பட்ட உறுதிமொழி படிவத்தினை கட்டாயம் அச்சகத்தில் தாக்கல் செய்திடல் வேண்டும் என்றும், அவ்வாறு பெறப்பட்ட உறுதிமொழி படிவத்துடன், வெளியிடப்பட உள்ள பிரசுரங்களின் 4 நகலுடன் மூன்று தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அச்சக வெளியீட்டாளர்கள் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் (அ) அலுவலத்தில் கட்டாயம் அறிக்கை தாக்கல் செய்திடல் வேண்டும் எனவும் அச்சக உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இச்சட்டப்படி, அவ்வாறு வெளியிடப்படும் தேர்தல் பிரச்சுரங்கள் நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அவை அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமாக கருத்தில் கொள்ளப்படும் என்பது விளக்கமாக எடுத்துறைக்கப்பட்டதுடன், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சி ஆதரவாளர்களாலோ அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்களாலோ வாக்காளர்களை கவரும் விதத்தில் விளம்பரங்கள் பத்திரிக்கை, ஊடகங்களில் வெளியிடப்படலாம் என்பதால், அவ்வாறான விளம்பரங்களும் இந்திய பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 77(1) ன்படி கணக்கில் கொள்ளப்பட்டு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

எனவே, ஆதரவாளர்களால் கொடுக்கப்படும் விளம்பரங்களை பொருத்து வேட்பாளர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும், எந்த ஒரு அரசியல் கட்சியினையோ அல்லது வேட்பாளர;களின் தனிப்பட்ட வாழ்க்கை விபரத்தை பிரசுரிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் சம்மதமின்றியோ அல்லது வேட்பாளரின் சம்மதமின்றியோ விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டால் அவை இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171 H பிரிவை மீறியதாக கருதப்பட்டு அந்த அச்சக உரிமையாளரின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்றும், நடத்தைவிதி அமுலில் உள்ள காலங்களில் பொது இடங்களிலும், நகராட்சி பகுதியிலும் போர்டுகள், தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்திட அனுமதியில்லை.

மீறி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதுடன், தக்க குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதுடன், இந்த விதிமீறலில் ஈடுபடும் அச்சக உரிமையாளர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆறுமாத காலம் சிறை தண்டனை அல்லது ரூபாய் இரண்டாயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தே தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட விதிமீறல்களுக்கு முரண்பாடாக செயல்படும் அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மற்றும் பிறர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. எனவே தேர்தல் ஆணைய விதிகளை தவறாது கடைபிடிக்குமாறு அச்சக வெளியீட்டாளர்கள் கூட்டத்தில் அறிவுத்தப்பட்டனர்.

இந்த கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் ஆதி திராவிடர் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!