Awarding ceremony for the best library school in Namakkal district!

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த நூலக பள்ளிக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த நூலகப்பள்ளிக்கான விருது 2018-19 விருது வழங்கப்பட்டது. இதில் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

இப்பள்ளியில் உள்ள நூலகத்தில் 6 ஆயிரத்து 712 புத்தகங்கள் உள்ளன. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயன்படுத்திய புத்தகங்கள் 4 ஆயிரத்து 810 ஆகும். ஆசிரியர்கள் பயன்படுத்திய புத்தகங்கள் ஆயிரத்து 250 ஆகும்.

இந்த நூலகத்தில் கூடுதல் வசதியாக சிசிடிவி கேமரா மற்றும் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம் அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசை பெற்றுள்ளது.

இப்பள்ளியில் உள்ள நூலகத்தில் ஆயிரத்து 427 புத்தகங்கள் உள்ளன. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயன்படுத்திய புத்தகங்கள் 295 ஆகும். ஆசிரியர்கள் பயன்படுத்திய புத்தகங்கள் 42 ஆகும். இந்த நூலகத்தில் கூடுதல் வசதியாக புரஜக்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தை பெற்றுள்ளது. இப்பள்ளியில் உள்ள நூலகத்தில் 5ஆயிரத்து 476புத்தகங்கள் உள்ளன. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயன்படுத்திய புத்தகங்கள் 4 ஆயிரத்து 528 ஆகும்.

ஆசிரியர்கள் பயன்படுத்திய புத்தகங்கள் ஆயிரத்து 150 ஆகும். சிறந்த நூலக பள்ளிக்கான விருதினை முதன்மை கல்வி அலுவலர் உஷா பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கினார்.

இதில் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!