At the Perambalur Police Station, Marriage to a woman with a Lover who refused to marry her

பெரம்பலூரில் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு காதலன் திருமணத்திற்கு அவகாசம் கேட்ட நிலையில் காதலியின் பெற்றோர் வற்புறுத்தலால், போலீசாரின் அறிவுரையின் பேரில் காவல் நிலையத்தில் அரங்கேறிய திடீர் திருமணம்:

பெரம்பலூர் நகராட்சி 15வது வார்டு கம்பன் நகரில் வசிப்பவர் வரதராஜ்-சுசீலா தம்பதியினரின் மகள் மஹாபாரதி(19). பெரம்பலூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.,கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவரும், அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன்-மாரியாயி தம்பதியினரின் மகனும், எம்.பி.ஏ.,வரை படித்துள்ள சிவா(23), என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே அவ்வப்போது தனிமையில் சந்திக்கும் சிவாவும், மஹாபாரதியும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மஹாபாரதி கர்ப்பாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர், இதற்கு யார் காரணம் என கேட்டறிந்து சிவாவின் வீட்டிற்கு சென்று, தனது மகளை சிவா திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டுள்ளனர்.

அதற்கு சிவாவின் பெற்றோர் சிவாவின் சகோதரர்கள் திருமணம் ஆகாமல் இருப்பதால் சிறிது காலம் காத்திருங்கள் பிறகு பேசி கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மஹாபாரதியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் கன மழையையும் பொருட்படுத்தாமல் பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

அதன் பேரில் போலீசார் சிவா உள்ளிட்ட அவரது பெற்றோரை அழைத்து பேசிய, உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி மற்றும் பழனிச்சாமி திருமணத்திற்கு சம்மதிக்கும்படி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவசரம் அவசரமாக பட்டுப்புடவை, பேண்ட், சர்ட் மாலை, தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்த இரு வீட்டார் காவல் நிலையத்திலேயே போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சிவாவை, மஹாலட்சுமி கழுத்தில் தாலி கட்ட வைத்து மணக்கோலத்தில் காவல்
நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலுள்ள தங்களது வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு காதலன் திருமணத்திற்கு அவகாசம் கேட்ட நிலையில் காதலியின் பெற்றோர் வற்புறுத்தலாலும், போலீசாரின் அறிவுரையின் பேரிலும் காவல் நிலையத்தில் அரங்கேறிய இந்த திடீர் திருமணத்தால் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!