Artificial Conservation Method: 3 Kg Baby Girl for a 50-year-old woman: Dr. Kalpana Information

செயற்கை கருதரிப்பு முறையில், 50 வயது பெண்ணிற்கு 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை : உலக அளவில் அதிக வயதுடையவர் பெற்றெடுக்கும் 10வது குழந்தையாக தூத்துக்குடியை சேர்ந்த பெண் பெற்றெடுத்துள்ளார் என அனிஷ் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் மருத்துவர் டாக்டர் கல்பனா தெரிவித்துள்ளார்.

குழந்தை இல்லா தம்பதியினருக்கான கருத்தரிப்பு மருத்துவ ஆலோசனை முகாம்: மதுரை குரு மருத்துவமனை சேவை ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மதுரை குரு மருத்துவமனையின் கிளையில் மகளிர் நோய் மற்றும் குழந்தை இல்லா தம்பதியினருக்கான கருத்தரிப்பு மருத்துவ ஆலாசனை முகாம் நடந்தது.

மதுரையில் குரு மருத்துவமனையில் தென்தமிழகத்தின் குழந்தையின்மை சிகிச்சைக்கு சிறப்பு பட்டம் பெற்ற முதல் மருத்துவர் டாக்டர் பி.கல்பனா தனது உயரிய சிகிச்சையின் மூலம் குழந்தையில்லாமல் தவித்த பல தம்பதியினருக்கு ஆலோசனைகள் வழங்கியும் சிகிச்சை அளித்தும் குழந்தை பெற வைத்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் கல்பனா தெரிவித்ததாவது: துாத்துக்குடியை சேர்ந்த ஒரு 50 வயது பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் 3 கிலோ

எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. எங்கள் மருத்துவமனையில் பல்லாயிரகணக்கான ஹிஸ்டிராஸ்கோப லேப்ராஸ்கோபி சிகிச்சை நடந்துள்ளன. மிகசிறந்த கருத்தரிப்பு விகிதம் எங்கள் மருத்துவமனையின் சிறப்பாகும். ஒரு நாளில் செயற்கை கருத்தரிப்பு முலம் 6 குழந்தைகள் விந்தணு குறைபாடு உடையவர்களுக்கு என்டோமெட்ரியோசிஸ் உள்ளவர்களுக்கும் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் நின்று 5 ஆண்டுகள் கழித்து 58 வயது பெண் கருமுட்டை தானமாக பெற்று அனிஷ் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் செயற்கை கருத்தரிப்பு முலம் 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பெற்று எடுத்துள்ளார்.

இக்குழந்தை உலக அளவில் அதிக வயதுடையவர் பெற்றெடுக்கும் 10வது குழந்தையாகும். பிறவியிலேயே கர்ப்பபை தடுப்பு சுவருடையவர், தடுப்பு சுவரை ஹிஸ்டிராஸ்கோபி முலம் அகற்றிய பின் செயற்கை கருத்தரிப்பு முலம் ஒரு நேரத்தில் 3 குழந்தைகளுக்கு தாயானது எங்கள் மருத்துவனையில் நடந்த சிறப்பாகும்.

குழந்தையில்லா தம்பதியினருக்கு உள்ள ஏக்கத்தை போக்குவதற்காகவே சிறப்பு முகாம்கள் மாவட்டம்வாரியாக நடத்தி வருகிறோம். அந்தவகையில் நாங்கள் ஏற்கனேவ துாத்துக்குடியில் ஒரு கிளை தொடங்கி அங்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி குழந்தை இல்லா தம்பதியினருக்கு குழந்தை பெறுவதற்கான நல்வழிகாட்டி வருகிறோம்.

அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மற்றொரு கிளை தொடங்கி ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தற்போது குழந்தை இல்லா
தம்பதியினருக்கு கருத்தரிப்பு மருத்துவ சிகிச்சை குறித்த இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தினோம்.

இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட தம்பதியினர் வந்து ஆலோசனையும் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்து சென்றுள்ளனர், இவ்வாறு டாக்டர் கல்பனா தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!