Aranarai Sri Pala vinayagar, Muthu Mariamman Temple Kumbabishekam || அரணாரை ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிசேகம்

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் உள்ள பாலவிநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடபெற்றது.

பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரணாரை வடக்கு காலணியில் பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகளால் கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு பாலவிநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது.

நேற்று காலை கணபதிஹோமம், லஷ்மிஹோமம், நவக்கிரக ஹோமங்கம். கோபூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழச்சியுடன் துவங்கியது. இதே போல் நேற்று மாலையும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், இன்று காலை யாக பூஜை, ஹோமம், நாடிச்சந்தனம், திரவியஹீதி பூர்ணாஹீதி, யாத்ராதானம் நடைபெற்றது. காலை மணிக்கு மேல் கடம் புறப்பாடு விமான கும்பாபஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், உற்சவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.ஏல்,ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் 21 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பேபி காமராஜ், முன்னிலை வகித்தார். கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேக்தை நடத்தினர்.

கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர், அரணாரை, செஞ்சேரி, நொச்சியம், ஆலம்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!