All government schools have to pass 100 percent of the general public Exam; Teachers advice to the CEO

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில், கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில், நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் கண்டறியப்பட்டன. அதன்படி 90க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்தன. அந்த பள்ளிகளில் வரும் அரசு பொதுத்தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பாடவாரியாக ஆய்வு மேற்கொண்டார். அதில் அரையாண்டுத் தேர்வில், தோல்வி அடைந்த மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல், அனைத்து பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சியை எட்டும் வகையில் அனைத்து பாட ஆசிரியர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார். மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!