Adding the name of the electoral list, the deletion, Address Correction: Perambalur Collector Probe

பெரம்பலூர்: இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 01.09.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.

அதன்படி இன்று வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் ஊர்புற நூலகம், தேவையூர் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மங்களமேடு டி.இ.எல்.சி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட ஆணையிட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குசாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற்று வருகின்றது.

மேலும் இச்சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம், பெயர் நீக்கலுக்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்வதற்கு படிவம் 8-ம், முகவரி மாற்றம் (ஒரே சட்டமன்ற தொகுதிக்குள்) படிவம் 8 ஏ-ம், பொதுமக்களால் உரிய ஆவணங்களுடன் அளிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி கடந்த 09.09.18 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6-ஜ 4,128 நபர்களும், பெயர் நீக்கலுக்கான படிவம் 7-ஜ 93 நபர்களும், திருத்தம் மேற்கொள்வதற்கு படிவம் 8-ஜ 1,408 நபர்களும், முகவரி மாற்றம் (ஒரே சட்டமன்ற தொகுதிக்குள்) படிவம் 8 ஏ-ஜ 239 நபர்களும் என 5,868 மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களையும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்காக இது போன்ற சிறப்பு முகாம்களிலும், ஏனைய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அலுவலக வேலை நேரங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் பொன்னுதுரை உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!