Action on social Media on election violators: official information

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி தலைமையில் இன்று பெரம்பலூர் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் தேர்தல் தொடர்பாக பதற்றம் நிறைந்த தகவல்களை பரப்புவதோ, தனிப்பட்ட ஒருவரை ஆதரித்தோ அல்லது இழிவுப்படுத்தியோ தகவல் பரப்பப்படுவதை கண்காணிக்கப்பட வேண்டும். அவ்வாறு தகவல் பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, தேர்தல் நடைபெற குறைந்த கால அளவே உள்ளதால் அனைத்து அலுவலர்களும் தங்களுக்குண்டான பணிகளை விரைந்து முடித்து, வரக்கூடிய பாராளுமன்ற பொதுத் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று பொதுப் பார்வையாளர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!