A solution to the problems of 813 children in the last year in Ramanathapuram district on the child line

ராமநாதபுரம் மாவட்ட குழந்கைள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் விடுத்துள்ள தகவல் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17 ஆண்டில் சைல்ட் லைன் முலம் 1098 இலவச டெலிபோனில் 2 ஆயிரத்து 426 அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகள் முலம் சைல்ட் லைன் குழு உறுப்பினர்கள் களப்பணியில் கண்டறிந்த 813 குழந்தைதகள் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என ராமநாதபுரம் மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் தெரிவித்தார்.

அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சைல்ட் லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி சேவை 1098 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சைல்ட் லைன் உங்கள் நண்பன் என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் சைல்ட் லைன் அமைப்பு முலம் நடத்தி வருகிறது.

சைல்ட் லைன் அமைப்பானது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தைகள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தொடர்புடைய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தைகள் ஒருங்கிணைத்து ஒபன் ஹவுஸ் என்ற வழிமுறையை பயன்படுத்தி குழந்தைகளுக்கான பிரச்சனைகளை அவர்கள் முலமாகவே கண்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தல், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல், கிராம வட்டார மாவட்ட அளவில் குழந்தைதகள் பாதுகாப்பு குழு அமைத்தல், கிராமசபை கூட்டங்களில் குழந்தை பாதுகாப்பு குறித்த தீர்மானம்ச நிறைவேற்றுதல் போன்ற பணிகளை சைல்டுலைன் அமைப்பு செய்து வருகின்றது.

கடந்த 2016-17ல் இலவச தொலைபேசி 1098 க்கு மொத்தம் 2 ஆயிரத்து 26 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இந்த தொலைபேசி அழைப்புகள் முலமாகவும் சைல்டுலைன் குழு உறுப்பினர்கள் களப்பணியில் கண்டறிந்தவை முலமாக மொத்த 813 குழந்தைகள் குறித்த பிரச்னைகள் கண்டறியப்ப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதில், குழந்தை திருமணம் 80, குழந்தை தொழிலாளர்கள் 30, பள்ளி இடைநின்ற குழந்தைகள் 69, பிச்சை எடுக்கும் குழந்தைகள் 23, வீட்டைவிட்டு ஓடிப்போன குழந்தைகள் 76, காணாமல் போன குழந்தைகள் 17,பாலியல் வன்முறை 11, ஆற்றுப்பபடுத்தப்பட்ட குழந்தைகள் 24, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் 40, கல்வி உதவி தேவைப்படும் குழந்தைகள் 136, காப்பக வசதி 22, சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள் 10, ஆசிரியர் அடித்தல் 64, பெற்றோர் அடித்தல் 74, உதவித்தொகை 89, பெற்றோர் உதவி கோரியது 46 என மொத்தம் 813 குழந்தைகள் குறித்த பிரச்ைனகள் தீர்வு காணப்பட்டது. பரமக்குடியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் கார்த்திக் என்ற சிறுவனுக்கு இருதய அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலண்டர் வெளியீடு, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும்குழந்தைகள் திருமணம் தடுப்பது குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நவ.14 முதல் தொடர்ந்து ஒரு வாரம்நடைபெறும், என தெரிவித்தார்.

மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சகுந்தலா, மாவட்ட சமுக நல அலுவுலர் குணசேகரி, சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!