A resolution in the Auto Association demanding to increase the meter fee not exceeding 5 years.

தமிழ்நாடு ஆட்டோ சங்கம் சிஐடியு மாநிலக்குழு நிர்வாகிகள் கூட்டம், பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் தெய்வராஜ் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில பொருளாளர் ஏ.எல்.மனோகர் வரவு செலவு மற்றும் மாநில செயலாளர் எம்.சிவாஜி வேலை அறிக்கையும் அளித்தனர்.

மாநில தலைவர் ப.குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ வும் ஆட்டோ சங்க மாநில செயலாளருமான எஸ்.கே.மகேந்திரன், சிறப்புரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அகஸ்டின் வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:

பெட்ரோல், டீசல் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும், ஆட்டோ சங்க தொழிலாளர்களுக்கு மானியத்தில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் பதிவை வரைமுறைப்படுத்த வேண்டும்,

தமிழில் படிவங்கள் வழங்க வேண்டும், கடந்த ஆண்டுக்கு முன் எப்.சி. சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,

ஓலா, உபேர் நிறுவனங்களால், ஆட்டோ தொழில் நலிவடைந்து வருகிறது எனவே அரசு நடவடிக்கை எடுத்து ஆட்டோ தொழிலை காக்க வேண்டும்,

ஆட்டோக்களுக்கு 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணங்களை தற்போதுள்ள விலைவாசி உயர்விற்கு ஏற்ப உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ஆட்டோ தொழிலாளர்களுக்கு பண்டிகைக்காலங்களில் நல வாரியத்தின் மூலம் ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகிகள் சி.சண்முகம், எஸ்.மல்லீஸ்குமார் பி.பெரியசாமி, பி.சிவசங்கர், எ.ராஜகுரு, பி.செந்தில்குமார் உள்பட பல மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். ஆட்டோ சங்க மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!