A love affair near Perambalur: A teenager chops off student’s neck

 

பெரம்பலூர் அருகே மங்கூன் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்என்பவரின் மஹாலட்சுமி (வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ரோவர் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனிடையே மங்கூன் கிராமத்தில் மகாலட்சுமியின் பெற்றோர் புதியதாக கட்டி வரும், வீட்டில் வெல்டிங் வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்ற அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சுதாகர் (வயது 25), என்ற வாலிபர் மகாலட்சுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை மஹாலட்சுமியிடம், தெரிவித்த சுதாகர் நேரடியாகவும், போன் மூலமும் அடிக்கடி அவரை தொந்தரவு செய்து வந்துள்ளார். சுதாகரின் காதலை ஏற்க மறுத்த மஹாலட்சுமி, சம்பவம் பற்றி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மகாலட்சுமியின் பெற்றோர் வெல்டிங் தொழிலாளியான சுதாகர், மீது கடந்த 09-09-2019ந் தேதி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 03-10-19ந்தேதி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரிலும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று கல்லூரி சென்று விட்டு வீடு திரும்பிய மகாலட்சுமியை பின்தொடர்ந்து சென்ற சுதாகர் மஹாலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, அவரது வீட்டிற்குள் நுழைந்தது தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உனது காதலை ஏற்க முடியாது மரியாதையாக வீட்டை விட்டு வெளியே செல் என்று மகாலட்சுமி கூறியதால் ஆத்திரமடைந்த சுதாகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கை பகுதியில் சரமாரியாக அறுத்து விட்டு தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவத்தில் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று மஹாலட்சுமியை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த, பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருதலை காதலால் வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!