a car in a collision on tamarind tree, near in Perambalur! : 4 dead 4 injured

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்து தீவீர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் சாத்தணார் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது சுமார் 58). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவரது மனைவி சுகுணா (46), டெய்லரிங் தொழில் செய்து வருகிறார்.

இவர்களது மகள்கள் காயத்ரி (வயது 28, தனியார் கல்லூரி துறைத்தலைவராக இருக்கிறார்), லோகதர்ஷிணி (வயது 21), மற்றும் இவரது மைத்துனர்கள் ராஜா (53), முருகன் (48), ஜெயரத்தினம் (73, கருப்பையாவின் மாமியார் ) ஆகியோர் தனது உறவினரான மனோஜ்குமார் (வயது 20), ஆகிய எட்டு பேரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு பெரம்பலூர் வழியாக மானோஜ்குமாருக்கு சொந்தமான காரில் ஆத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காரை மனோஜ்குமாரே ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கார் பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிமரத்தின் மீது அதிபயங்கரமாக மோதியது.

இதில், காரில் (ஆம்னி) பயணித்த ராஜா , முருகன், ஜெயரத்தினம், ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், காயத்திரி, லோகதர்ஷிணி, சுகுணா, நடராஜ், மனோஜ்குமார், ஆகியோர் பலத்த காயமடைந்து அபய குரல் எழுப்பியுள்ளனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சேலம் – ஆத்தூர் சென்று விட்டு திருச்சி நோக்கி செல்வதற்காக காரை ஓட்டி வந்த ஒருவர் மாரியம்மன் கோவிலில் தூக்கம் வந்ததால் படுத்து தூங்கி கொண்டிருந்தார். கார் விபத்துக்குள்ளான சத்த்தை கேட்டு விழித்த அவர் அக்கம்பக்கத்தினரை எழுப்பி விபத்தில் சிக்கியவர்களை மீட்டதுடன் 108 க்கு அழைத்து தகவலையும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் விபத்து மீட்பு படையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ஈரோட்டை சேர்ந்த அர்ச்சுனண் மகன் நடராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தியதில் முதல் கட்டமாக விபத்துக்கான காரணம் காரை ஓட்டி வந்த மனோஜ் அசதியில் அயர்ந்து தூங்கியதே என தெரிய வந்துள்ளது.

ஓட்டுனர் தூங்கியதால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அவர்களது உறவினர் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் தூக்கம் வந்தால் அருகில் எங்காவது ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் வாகனத்தை இயக்குவதே சிறந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!