4th Annual Day of Almigty Vidyalaya school in Siruvachur Near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா, பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் கே.சிவகாமி முன்னிலை வகித்தார். ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களில் மூன்றுபேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். பின்னர், பள்ளி மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த சில வாரத்திற்கு முன்பு, 2ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஒலிம்பியாட் எனும் திறன் அறித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று பேர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய பள்ளிதாளார் ஆ.ராம்குமார் ஆல்மைட்டி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஊர்களுக்கு எங்களது ஆசிரியர் குழு நேரடியாக சென்று பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது குழந்தைகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வாரம் ஒரு பெற்றோர் பள்ளிக்கு வந்து காலைமுதல் மாலை வரை வகுப்பறையில் குழந்தைகளின் கல்வி குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட பள்ளிநிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். துணைத் தலைவர்; சி.மோகனசுந்தரம், செயலாளர் சிவகுமார், பள்ளி துணைமுதல்வர் கே.சாரதாசெந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சந்திரோதயம், ஹேமா, ஜாய்ஷகிலா, தமிழரசன், மணிகண்டன், உள்பட மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!