4 days management training for Namakkal District Government Officers

நாமக்கல் மாவட்ட அரசு அலுவலர்களுக்கான மேலாண்மைப் பயிர்சி வகுப்பு 4 நாட்கள் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பராமரிக்கப்படும் அனைத்து கணக்குகளின் வரவு செலவுகளை பொதுநிதி மேலாண்மை அமைப்பின் (பிஎப்எம்எஸ்) கீழ் கொண்டு வந்து மின்னனு பண பரிமாற்றம் திட்டத்தினை செயல்படுத்திட, உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கணக்கர்களுக்கான மேலாண்மை பயிற்சி வகுப்பு ராசிபுரம் ஞானமணி இன்ஜினியரிங் கல்லூரியில் 4 நாட்கள் நடைபெற்று வருகிறது.

மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தார். கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி இவைகளின் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் வரவுசெலவுகளில் வெளிப்படைத்தன்மையினை கொண்டுவரவே அரசின் உத்தரவிற்கிணங்க மின்னனு பணபரிமாற்றத்தினை கொண்டு வந்துள்ளது, எனவும் தூய்மையான நிர்வாகமே இதன் நோக்கம் எனவும், அனைத்து அலுவலர்களும் இப்பயிற்சினை திறம்பட பெற்று அலுவலக நடைமுறையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் கலெக்டர் கூறினார்.

இப்பயிற்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) ஹசினாபேகம், (உள்ளாட்சித் தேர்தல்) மீராபாய், (சத்துணவுத்திட்டம்) மாரிமுத்துராஜ் மற்றும் ஊராட்சிஒன்றிய அலுவலக வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை தாசில்தார்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!