3 consecutive days of rain in the district, rainfed cultivation and seeding work Speedy!

கடந்த 3 நாட்களாக, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

ஆடிப்பட்டத்தில், விதைப்பு பணியை மேற்கொள்ள தயராக இருந்த விவசாயிகளுக்கு மழை பொய்த்தால், தொய்வு ஏற்பட்டது. ஆடி முடிந்து ஆவணி பிற்பகுதியில் தற்போது கடந்த சில நாட்களாக மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.

மானாவாரி சாகுபடி நிலப்ரப்பை அதிக அளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில், பருத்தி, மக்காச்சோளம், கம்பு, உள்ளிட்ட பயிர்களும், இறவை பயிரான நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு நாற்று விடுதல் மற்றும் பசுந்தாள் உரம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அன்று மக்காச்சோளமும், பருத்தியும் அதிக விதைக்கும் பணி மாவட்டம் முழுவதும் அதிகாலை முதலு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் காலை வரை பதிவான மழையளவு விவரம் : வேப்பந்தட்டை 5 மி.மீ, தழுதாழை 2 மி.மீ ஆகும்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!