+2, Exam Results: Perambalur; 95.15% pass in the 3rd place in Tamil Nadu

பெரம்பலூர் மாவட்டம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.15 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று மாநில அளவில் 3வது இடத்தைப் பெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 71 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,155 மாணவர்கள், 4,255 மாணவிகள் என மொத்தம் 8,410பேர் எழுதினர். இதில் 3,904 மாணவர்கள், 4,098 மாணவிகள் என மொத்தம் 8,002 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் மாணவர்கள் 93.96 சதவீதமும், மாணவிகள் 96.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 95.15 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


100 % தேர்ச்சி :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 71 மேல்நிலைப்பள்ளிகளில் 7 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 30 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இதன்படி அரசுப் பள்ளிகளில் கை.களத்தூர், ரஞ்சன்குடி, கவுல்பாளையம், கூத்தூர், ஒகளூர், பேரளி, கிழுமத்தூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் செயின்ட் தோமினிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளும்,

தனியார் பள்ளிகளில் பெரம்பலூர் ஸ்ரீசாரதாதேவி, மவுலானா, நெற்குனம் ரோவர், லாடபுரம் எம்ஆர்வி, அரும்பாவூர் ஸ்ரீராகவேந்திரா, பாடாலூர் அன்னை, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ், ஒதியம் வான்புகழ் வள்ளுவர் ஆகிய 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன், கோல்டன் கேட்ஸ், ஸ்ரீராமகிருஷ்ணா, செயின்ட் ஜோசப், ஆரூத்ரா, லெப்பைக்குடிகாடு விஸ்டம், அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா, சாந்திநிகேதன், நக்கசேலம் ஹயகீரிவா, செட்டிக்குளம் லிட்டில் பிளவர், வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா, பாடாலூர் ஸ்ரீ அம்பாள், திருமாந்துறை செயின்ட்ஸ் ஆண்ட்ரூஸ் ஆகிய 13 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்:

பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய 27 மாற்றுத்திறனாளிகளில் கண்பார்வை குறைபாடு
டையவர்கள் 4 பேரும், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் ஒருவரும், உடல் ஊனமுற்றோர் 9 பேரும், இதர வகை மாற்றுத்திறனாளிகள் 11 பேரும் என மொத்தம் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91,67 சதவீதயாகும்.

100க்கு 100 மார்க்

வேதியியல், கணக்குபதிவியியல், உயிரியல் பாடத்தில் தலா 2 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ், தாவரவியல் பாடத்தில் தலா ஒருவரும், கணக்குபதவியியல் அன்ட் தணிக்கையில் பாடத்தில் 10 பேரும் என மொத்தம் 18 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள் :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 அரசு பள்ளிகளில் ஆயிரத்து 829 மாணவர்களும், 2 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 955 பேர் தேர்வெழுதினர். இதில் ஆயிரத்து 728 மாணவர்களும், 2 ஆயிரத்து 69 மாணவிகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 797 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95 சதவீதமாகும். 40 அரசு பள்ளிகளில் 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.15 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று மாநில அளவில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!