Exam Hall ticket for +1, Private candidates on website!

பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை விடுத்துள்ள தகவல்:

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019, சேவை மையங்களில் வாயிலாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (Private Candidates) தேர்வுகூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பாக, நடைபெறவுள்ள மார்ச் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 22.02.2019 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

எனவே www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று முதலில் “Click” என்ற வாசகத்தினை ‘ஊடiஉம’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “ HIGHER SECONDARY FIRST YEAR EXAM MARCH 2019 – PRIVATE CANDIDATE – HALL TICKET PRINT OUT’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்தால், அவா;களுடைய தோ;வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மார்ச் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in, என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!