மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50,000 வரைவோலையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமதுவிடம் வழங்கினர்.

RETIERD_POLICE_RELEIFEபெருமழையால் அடிப்படை வசதிகளின்றி தத்தளிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், அலுவலக சங்கங்கள், பிரஸ் கிளப், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செட்டிகுளம், பாடாலூர் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் தாமாக முன்வந்து வழங்கிய குடிநீர், பிஸ்கட், பிரெட் பாக்கெட், பாய், போர்வைகள், புடவைகள், சட்டைகள், நைட்டிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதுவரை சுமார் 56 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 13 லாரிகளில் அனுப்பப்பட்டு முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு உதவிகளை வழங்க விரும்புவோர் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வரைவோலையினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள். ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கண்ணன், பொருளாளர் ஆர்.சண்முகம், செயலாளர் பாலகுருமூர்த்தி உள்ளிட்டோர் இந்த வரைவோலையை வழங்கினார்கள்.

மழையால் பாதிக்ப்பட்டுள்ள சென்னை, கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி வழங்க விருப்பமுள்ளவர்கள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் நிவாரண உதவிகளை வழங்கலாம். தமிழக முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு நிதி வழங்க விரும்பும் நபர்கள் “CHIEF MINISTER PUBLIC RELIEF FUND – CHENNAI”என்ற முகவரிக்கு வரைவோலை அல்லது காசோலை எடுத்து நிதித்துறை இணைச் செயலாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம். அல்லது வரைவோலை, காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!