dyfi_perambalur
பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள டைஃபி கூட்ட அரங்கில், இன்று காலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு டைஃபி மாவட்ட செயலாளர் எஸ்.பி.டி. ராஜாங்கம் தலைமை வகித்தார். இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்கக் கோரியும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை கனிம வளங்களை கொண்டு அரசு தொழிற்சாலைகள் துவங்கி இம்மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திடக் கோரியும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை அரசு இது நிறைவேற்றததால் மீண்டும் நிலங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்ககோரியும்,

டெங்கு காய்ச்சலால் இறந்த நாரணமங்கமலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சதீஸ்குமாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அரசு வழங்க வேண்டும், மாவட்டத்தில் மருத்துவம், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் கோரிக்கை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றிய தலைவர் க.முத்தையா வரவேற்றார். மாவட்டக்குழு என்.ராமு கொடியேற்றி வைத்தார். டைஃபி மாவட்டக்குழு சி.பாரதி, பி.கஜேந்திரன், என்.சுரேஷ்குமார். பி.ராஜா, எஸ்.செல்வகுமார், எஸ்.இராமக்கிருஷ்ணன், எஸ்.வேல்முருகன், முன்னிலை வகித்தனர்.

மக்களுக்கான மருத்துவ சங்க மாநில செயலாளர் மருத்துவர் சி.கருணாகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் என்.செல்லதுரை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.கருணாநிதி, மாவட்ட செயலாளர் அழகர்சாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.கலையரசி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், ஆட்டோ சங்க மாநிலக்குழு சி.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணசாமி, ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள்.

டைஃபி மாநில துணைச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், டைஃபி மாவட்ட செயலாளர் டி.அறிவழகன், டை.ஃபி மாவட்ட பொருளாளர் டி.சீனிவாசன், சிறப்புரையாறறினார்கள்.

பெரம்பலூர், ஆலத்தூர் டைஃபி ஒன்றிய செயலாளர் என்.சோமு நன்றி கூறினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!