பெரம்பலூர்: குரும்பலூர், பூலாம்பாடி மற்றும் அரும்பாவூர் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குரும்பலூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 33 லட்சத்தில் தினசரி 2,00,000 லிட்டர் குடிநீர் கிடைக்கப் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளில் அமைக்கப்பட்டு வரும் நான்கு புதிய கிணறுகள் மற்றும் நான்கு மேல்நிலைத் தொட்டிகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், குடிநீர் விநியோகம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீராக கிடைக்க முறையான தொடர் நடவடிக்கை எடுக்கவும் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மேலும், குரும்பலூர், பேரூராட்சியில் பாளையம், 5வது வார்டு, மேட்டாங்காடு, பர்மா காலணி ஆகிய பகுதிகளிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் பாரதிபுரம் பகுதியிலும் தலா ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்(பொ) குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகவும், தரமானதாகவும் பணிகளை முடிக்க வேண்டுமென்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பூலாம்பாடி பேரூராட்சியில் தலா ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான மேலக்குணங்குடி பகுதியில் அங்கன்வாடி மைய கட்டடம் அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெறுவதையும், தேவராஜ் நகரில் மேற்கூரை மட்டம் பணி நடைபெற்ற வருவதையும், பாரதி நகர் அங்கன் வாடி முடிவுற்றதையும் ஆக மொத்தம் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) பார்வையிட்டார்.

பூலாம்பாடி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2கோடியே 10 இலட்சத்தில் தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கப் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய கிணறு அமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் பணிகள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மார்க்கரெட் சுசிலா, செயல் அலுவலர் என்.குமரன், உதவி பொறியார் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!