பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றை மக்கள் தொகைக்கு வளர்ச்சிக்கு ஏற்ப சுமார் ஆயிரத்தற்கு மேற்பட்ட போலீசார் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது 400 பேர் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர்.

ஆயுதப்படை பிரிவில் சுமார் 400 பேர் பணிபுரிய வேணடும் தற்போது 260 பேர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 2009 ஆம் அரியலூர் மாவட்டம் தாய் மாவட்டமான பெரம்பலூரில் இருந்து பிரிந்த போது அதிகமான போலீசாரை பிரித்து கொடுத்தனர்.

அதன் பின்னர் 20 மேற்பட்டவர்கள் பணியிட மாற்றத்தில் சென்று விட்டனர். 5 போலீசார் இறந்து விட்டனர். இது போன்று 96 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் சுமார் 50 பேர் மட்டுமே பணி செய்து வருகின்றனர். இதே போன்று 11 காவல் உதவி ஆய்வாளர் இடங்கள் காலியாக உள்ளன.

25 மேற்பட்ட போலீஸ் அலுவலர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. வரும் நாட்களில் சுமார் 150 பேர் பணியிட மாற்றம், பணி ஓய்வு மூலம் செல்ல உள்ளனர். இதே போன்று மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போதமான ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஏட்டையாக்கள், காவல்கள் என அனைத்து தரப்பிலும் போதுமான ஆட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் சேவை செய்யும் திருவிழா கூட்டங்கள், கட்சி கூட்டங்கள், மற்ற பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் பாதுகாப்பு அளிக்க போலீசார் அனுப்ப படுவதால் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிக்கவனம் செலுத்த முடியாமல் காவலர்கள் அல்லாடி வருகின்றனர்.

இதே போன்று குற்றப்பிரிவு, பொருளாதார தடுப்பு குற்றப்பிரிவு, கலால் பிரிவு, அதிரடிப்படை, தடயவியல் பிரிவு, தனிப்பிரிவு, போக்குவரத்து, மகளிர் காவல், ஆட்கடத்தல் தடுப்புக் காவல் உள்ளிட்ட பல பிரிவை சேர்ந்த காவல் துறையினர் கூடுதல் பணிச்சுமை காரணமாக காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் தவித்தும் கடும் மனஉளச்சலுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

எனவே தமிழக அரசு போதுமான காவலர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நிம்மதியை தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!