தென் இந்திய புறாக்கள் பறக்கவிடும் பந்தயத்தில் சென்னை பம்மலை சார்ந்த திரு.டி. தேவராஜ் 2017-2018-ம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அண்மையில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற தென் இந்திய புறா பறக்கவிடும் பந்தயம் நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த பந்தயத்தில் ஆண்டுதோறும் வெற்றி பெறும் வீரர்கள் பரிசளித்து கவுரவிக்கப்படுவர். இதன்படி இந்த ஆண்டின் புறா பந்தய வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னை தேனாம் பேட்டை யில் உள்ள காமரஜர் அர்ங்கில் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு புதிய சென்னை புறா பந்தய அசோசியேசன் தலைவர் திரு.லயன். கே. பழனியப்பன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஹைதராபாத் மத்திய ரிசர்வ் படை டிஐஜி அஜய் பரதன்,ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் ,திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தென் இந்திய புறா பந்தயத்தில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் big wing factory அணி 2017-2018-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் வென்று சாதனை படைத்தமைக்காக பாரட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த அணியின் தலைவரான டி.தேவராஜன் இதற்கான பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாம் சிறுவயது முதல் புறா பந்தயங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவன் என்றும், இதனால்தான் இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வெல்ல முடிந்தது என கூறினார். இதே சாதனைகளை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என அவர் தெரிவித்தார். 100 கிலோ மீட்டர் முதல் 800 கிலோ மீட்டர் வரையிலான போட்டிகளில் திரு தேவராஜின் அணி வெற்றிப்புள்ளிகளை குவித்து சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!