சென்னையில் , கேரளாவின் பிரபல ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் மாணவிகள் 35 பேர் வரைந்துள்ள மகாபாரத ஓவியகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதிகாசமான மகாபாரத கதையினை 113 ஓவியங்கள் மூலம் பிரின்ஸ் மாணவிகள் 35 பேர் படைத்துள்ளனர்.மகளிர் படைத்த மகாபாரதத்தை பகவத் மியூரலாக வழங்க திட்டமிட்டு இருப்பதாக சென்னையில் பிரின்ஸ் தலைமையில் திரண்ட ஓவியர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கேரள மாநிலதலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஓவிய கண்காட்சியை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்ததாக தெரிவித்தனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஓவியர் பிரின்ஸ் தொன்னக்கல் தலைமையிலான ஓவியர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த மகாபாரத மியூரல் கண்காட்சி சென்னை லலிதகலா அகாடமியில் வருகிற 4-ந்தேதி முதல் 710-ந்தேதி வரை நடைபெறுகிறது என்றும் இதில் பிரபல ஓவியர்களான மணியம் செல்வம்,கேசவ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் பிரின்ஸ் தெரிவித்தார். ஆடலரணி கோபிகாவும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.சென்னையில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளை திருமதி நிர்மலா செய்து வருகிறார். இந்ந கண்காட்சி அடுத்து டெல்லி ,மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சென்னை ஓவிய கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!