கோவை கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை மாடியில் இருந்து தள்ளி உயிரிழப்பை ஏற்படுத்திய போலி பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்கோவை நரசீபுரத்தில் இயங்கி வரும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.கல்லூரியில் தன்னை தேசிய மேலாண்மை பேரிடர் பயிற்சியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஆறுமுகம் என்பவர் மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் உயிர் தப்பும் பயிற்சி அளித்தார்.தரையில் மாணவர்கள் வலை விரித்து நின்று கொள்ள, மாணவர்களை ஒவ்வொருவராக கல்லூரி கட்டிடத்தின் மேல் இருந்து குதிக்கவைத்தார்.இந்த பயிற்சியில் 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 2வது மாடியின் சன்சேடு மேல் இருந்து பயிற்சியாளர் ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கீழே குதித்தனர். கீழே வலையை பிடித்துக்கொண்டு தயாராக இருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் இருந்து குதித்தவர்களை பத்திரமாக பிடித்தனர்.இதில் 4 மாணவர்கள் 2வது மாடியின் சன்சேடில் இருந்து வலையின் மீது பத்திரமாக குதித்த நிலையில் அந்த கல்லூரியில் 2ம் ஆண்டு பிபிஏ படிக்கும், நாதேகவுண்டன்புதூரை லோகேஸ்வரி என்ற 19 வயது மாணவியை குதிக்க வைக்க முயன்றார் பயிற்சியாளர் ஆறுமுகம்..!மிகுந்த அச்சத்துடன் காணப்பட்ட மாணவி லோகேஸ்வரி 2வது மாடி சன்ஷேடில் இருந்து கீழே குதிப்பதற்கு தயங்கி பயத்தால் ஏற்பட்ட நடுக்கத்தில் சன்ஷேடில் அமர்ந்துகொண்டார். அவருக்கு ஆறுமுகம் தைரியம் கொடுத்து கீழே குதிக்கக் கூறினார்.இருந்தாலும் தயங்கி கொண்டே இருந்த மாணவியை ஒரு கட்டத்தில் ஆறுமுகம் திடீரென கீழே பிடித்து தள்ளினார். இதை சற்றும் எதிர் பார்க்காத லோகேஸ்வரி கீழே விழும்போது முதல்மாடி சன்ஷேடில் தலை மோதி, ரத்தவெள்ளத்துடன் வலையில் வந்து விழுந்தார்.கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்ததார்.பிணகூறாய்வில் மாணவியின் கழுத்து எலும்பு முறிந்து நொறுங்கியதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவி இறந்த சம்பவத்தை அடுத்து கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரியில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவி லோகேஸ்வரி குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித் துள்ளார்.மாணவியின் தந்தை நல்லாகவுண்டர் அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை ஆலந்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில் இந்தப் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புக்கும் தொடர்பில்லை என்றும் ஆறுமுகம் தங்களது பயிற்சியாளர் அல்ல என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மறுத்துள்ளதுகைதான ஆறுமுகத்திடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஆறுமுகம், சென்னை மாம்பாக்கத்தில் தங்கி இருந்து கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் அனுமதியைப் பெற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்துள்ளார் .

இதற்காக, பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்புவது போல கடிதங்களை கல்லூரிகளுக்கு அனுப்பி, ஆணையத்தின் பயிற்சியாளர் என்ற பெயரில் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக பயிற்சிகள் அளித்ததாக கூறப்படுகின்றது.மேலும், பயிற்சியில் பங்கு பெறும் மாணவமாணவிகளுக்கு அதற்கான சான்றிதழை 50 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், வேலைவாய்ப்புக்காக அதை பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் கூறி ஆயிரக்கணக்கில் வசூல் செய்து மோசடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். ஆறுமுகம் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் போலி என்பதை உறுதிப்படுத்திய போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!