The cost of the property affecting the poor is very high: cut in half! PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள மற்றொரு அறிக்கை :

தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி 50 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடு அளவுக்கும், வாடகை குடியிருப்புகள், குடியிருப்புகள் அல்லாத வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 விழுக்காடு அளவுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சொத்துவரி கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை; சென்னை உயர்நீதிமன்றமே சொத்து வரியை உயர்த்தும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பதை வைத்துப் பார்க்கும் போது, சொத்துவரி உயர்வு நியாயமாகத் தோன்றலாம்.

ஆனால், ஒரே நேரத்தில் சொத்துவரியை 100% உயர்த்துவது சரியல்ல. பரம்பரையாக உள்ள சொந்த வீட்டில் வாழ்ந்து கொண்டு வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மக்களை இது பாதிக்கும்.

வாடகைக்கு விடப்படும் வீடுகளை வணிக நோக்கம் கொண்டதாக கருதி அவற்றுக்கு 100% சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வீட்டு உரிமையாளர்களும் இந்த சொத்து வரி உயர்வை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை; இந்த சுமையை வாடகைதாரர்கள் மீது தான் சுமத்துவர் என்பதால் சென்னை போன்ற மாநகரங்களில் வீட்டு வாடகை பெருமளவில் உயரும்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாததால் கடந்த ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய ரூ.3558 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒவ்வொரு ஆண்டும் தமிழக உள்ளாட்சிகள் சுமார் ரூ.4000 கோடியை இழக்கும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் ஏற்படும் இழப்புடன் ஒப்பிடும் போது சொத்துவரியை உயர்த்தாததால் ஏற்படும் இழப்பு என்பது மிக மிகக் குறைவு ஆகும். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை பாதியாகக் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!