ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார்போல் இந்த கால கட்டத்தில் ஆயிரம் ஆயிரம் சச்சார்கள் உருவாக வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம முன்னேற்றக்கழக தலைவர் எச்.எம்.ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.நாதியற்றவர்களின் நாவாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த நீதியரசர் ராஜிந்தர் சச்சாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள ரம்ஜான மஹாலில் நடைபெற்றது.இந்த விழாவுக்கு தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது வரவேற்புரை நிகழ்த்தினார்.பேராசிரியர் காஜாகனி தொகுப்பாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நீதிக்கு தலைவணங்கிய காலம் போய் தற்போது நீதிபதியே தலைவணங்கும் காலமாக உள்ளது என்றும் இந்த கால கட்டத்தில் சச்சார் போன்றவர்களின் சேவை மிக மிக அவசியம் என தெரிவித்தார்.சச்சார் குறித்த கட்டுரைகளை நூலாக தயார் செய்தால் அதனை வெளியிட தாம் தயாராக இருப்பதாக கூறினார்.நினைவேந்தல் நடத்துவதற்கு கூட போராடிதான் மண்டபம் பெற்று இருப்பதை குறிப்பிட்ட வீரமணி இந்த நிகழ்வை நடத்தும் தமுமுகவுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

 

விழாவில் உரையாற்றிய நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, இஸ்லாமியர்களின் கல்வி வேலை வாயப்பு பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியவர் சச்சார் என புகழாரம் சூட்டினார். இன்று அவர நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கருத்துகளை கடைபிடிக்க முன்வருவதுடன் இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளை கல்வி போதிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உரையாற்றினார். மனுதர்மத்தை நடைமுறை படுத்துவதற்கு பாஜக பாசிச அரசு குற்றம் செய்தவர்கள் இஸ்லாமியர் இல்லை என்றால் விடுவிப்பதும் இஸ்லாமியர் என்றால் சிறையில் அடைத்து துன்பப்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டு இருப்பதாக துமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி கூறினார்.

 

1985-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும் 35 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டோருக்காக இந்தியா முழுக்க ஓடோடி உழைத்தவர் சச்சார் என்று நீதியரசர் சந்துரு தெரிவித்தார். ஹேபியஸ் கார்பஸ் என்பதை முறைப்படுத்தியவர் தேர்தல் ஆணைய சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் என்றும் நோட்டா என்னும் வாக்குப்பதிவு முறையை கொண்டுவர காரமாக இருந்தவர் சச்சார் என பேராசிரியர் ஜவாஹிருல்லா புகழாரம் சூட்டினார்.இட ஒதுக்கீட்டை போன்று சமவாய்ப்பு ஆணையம் அமைக்க தொடர்ந்து போராடுவோம் என்றும் சச்சார் காட்டிய வழியில் பாசிச அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!