சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த   பிக்சாலைவ் செயலியை கண்டுபிடித்த குழுவின் ஒருவரான தமிழக மாணவர் ராஜசேகர் சுந்தரேசன் இந்த புதிய இந்திய செயலியை 10 பேர் கொண்ட குழு கடந்த 3 மாதங்கள் ஒன்றிணைந்து அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ,இந்த புதிய பிக்சாலைவ் செயலியில் அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.  குறிப்பாக டிரென்டிங் எனப்படும் முன்னணி தகவல்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறிய மாணவர் ராஜசேகர் சுந்தரேசன் நாம் பயன்படுத்தி வரும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இல்லாத பல புதிய வசதிகள் இந்த செயலியில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதில் சிறப்பம்சமாக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே முதன்முறையாக உள்ளூர் தயாரிப்பில் அறிமுகம் ஆன செயலியாகும்.இந்த செயலியை கண்டுபிடித்த 10 பேர்க் கொண்ட குழுவில் கிருஷ்ணகிரி சூளாமடை கிராமத்தை சேர்ந்த பொறியாளர் இடம்பெற்றுள்ளதும் மேலும் தம்மை முதல்முறையாக 50 ஆயிரம் பணங்கொடுத்து பொறியாளராக படிக்க வைத்தது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்கள் தான் என்றும் பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.இந்த புதிய பிக்சாலைவ் செயலி வருங்காலங்கலில் இளைஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் புதிய மாற்றத்தையும்,புரட்சியையும் கொண்டுவரும் என்றும் ராஜசேகர் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!