பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் நடந்த குறைதீர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், 32 வார்டுகளுக்கும் சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக ஜெர்மனியில் இருந்து ஆயிரம் வாகனங்கள் வாங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

 

Tags:

Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!