paddyமாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-16 காரிப் கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

இக்கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு அரசால் நிர்ணயிக்கபபட்ட குறைந்த பட்ச ஆதார விலை மற்றும், ஊக்கத் தொகையும் சேர்த்து “ஏ” கிரேடு அதாவது சன்ன இரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1520-ம் சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1460-ம் வழங்கப்பட்டு வருகின்றது.

வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூரில் திரௌபதி அம்மன் கோவில் திடலிலும், பூலாம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், கை.களத்தூர் காந்தி நகரிலும், வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும் செயல்பட்டு வருகின்றது.

குன்னம் வட்டத்தில் ஒகளுர் கிராமத்தில் பிள்ளைமார் மாம்பழத் தோட்டம் அருகிலும், நன்னை கிராமத்தில் பழைய அரசமங்கலம் மாரியம்மன் கோவில் அருகிலும், எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகிலும், அகரம்சீகூருக்கு வயலூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும, பெரம்பலூர் வட்டத்தில் கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் உள்ளிட்ட 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதத்துடன், அனுமதிக்கப்பட்ட திரிபுகளுக்கு மிகாமல் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

மேலும் விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை வழங்கி தங்களது நெல்லுக்கான கிரயத் தொகையினை தங்களது வங்கி கணக்கில் மின்னனு தீர்வு திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது நேரடியாக ரொக்கமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம், என அதில் தெரிவித்துள்ளார் .


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!