komariகிராம பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க, கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை போட மக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய்க்கான தடுப்பூசி போடும் முகாம் வருகின்ற மார்ச். 1 முதல் மார்ச் 21 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று நடந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

கிராம பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கால்நடைகள் விளங்கி வருகின்றன. கால்நடைகள் கிராமப்புறத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்நோய் 63 வகையான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், மேல்தோல் முடிகள் அதிகம் வளா;ந்தும் காணப்படும். பால் கறவை குறையும். கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும்.

எனவே இந்நோய்களிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 10-வது சுற்றின் கீழ் 2016-ம் வருடம் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பு ஊசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், ஆட்டோ விளம்பரங்கள் மூலமாகவும், தண்டோராக்கள் மூலமாகவும் தெரியப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை கால்நடைத்துறை மற்றும் கிராம ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கால்நடை துறையினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!