பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்திய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேப்பந்தட்டையில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகில் வெண்பாவூரை சேர்ந்த முருகேசன் என்பவரது இடத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், வேப்பந்தட்டை ஒன்றிய குழுத் தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் கூட்டம் நடத்துவதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து வேப்பந்தட்டை வடக்குப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு அனுதியின்றி கூட்டம் நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ தமிழ்செல்வன் மற்றும் ஜெயலட்சுமி கனகராஜ் ஆகிய இருவர் மீதும் கிராம நிh;வாக அலுவலர் சரவணன் அரும்பாவூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அரும்பாவூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!