perambalur_collectorateபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பெரம்பலூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள விவசாயிகள் சேவை மையங்களில் விவசாயம் சம்மந்தப்பட்ட அனைத்து பயிற்சிகளும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பண்ணைக்குட்டைகள், மரக்கன்றுகள் நடுதல், காளான் குடில் அமைத்தல், சூரிய ஒளி மோட்டார் அமைத்தல், மண்புழு உரத்தொட்டி அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு அரசின் மூலம் மானிய உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனை விவசாயிகள் முறையாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ள நிவாரணத்தில் விடுபட்டுபோன விவசாயிகள் விண்ணப்பம் அளித்தால் ஆய்வு செய்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7.1.2016 முதல் வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைத்து பருத்தியையும் ஒழுங்குமுறை விற்பனை நிலையத்திற்கு கொண்டுவந்து சரியான எடையில், நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர சராசரி பெய்ய வேண்டிய மழையளவு 861 மி.மீ ஆகும். 2015-ஆம் ஆண்டு 1109.14 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் தற்போது நெல் 10919 எக்டரிலும், கரும்பு 5747 எக்டரிலும், பயறுவகை பயிர்கள் 1045 எக்டரிலும், பருத்தி 20,383 எக்டரிலும், தானியப்பயிர்கள் 53392 எக்டரிலும், மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 1606 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 5.285 மெ.டன், பயறுவகை விதைகள் 4.464 மெ.டன் உள்ளிட்ட விதைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாரில் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் யூரியா 603 மெ.டன், டி.ஏ.பி. 455 மெ.டன், பொட்டாஷ் 833 மெ.டன் மற்றும் என்.பி.கே. 1767 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது என்று வேளாண்மை இணை இயக்குநர் சந்திரன் தெரிவித்தார்.

விவசாய சங்க பிரதிநிதிகள் எஸ்.முருகேசன், இராஜாசிதம்பரம், ஏ.கே.ராஜேந்திரன், என்.செல்லத்துரை, ராஜூ, வரதராஜன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் 12 நபர்கள் தங்கள் கருத்துக்களை தொpவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

சின்ன முட்லுவில் நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், விவசாயிகளுக்கான மின் இணைப்பு விரைந்து வழங்கிட வேண்டுமென்றும், கரும்பு பயிருக்கு அரசு அறிவித்த விலை கொடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்ககை வைத்தனர்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஆலை நவீனபடுத்தும் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கரும்பு அரவைக்கான தொகை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,

கைகளத்தூர;, அரும்பாவூர், மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம்; அமைத்து தர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய விளக்கங்களை கேட்டு, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அலுவலர;களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், பி.சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மு.இராஜகோபால், வேளாண்மை துணை இயக்குநர் சு.அய்யாசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் நாகஜோதி, வேளாண்மை துணை இயக்குநர்(வே.வ) செ.சுப்பரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநர் இராஜாமணி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்(பொ) கண்ணன், கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளர் இராஜாசாமி நாதன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!