பெரம்பலூர்: உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 970 ரொக்கம் பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

147.பெரம்பலூர் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்ப்பட்ட ஆலத்தூர் அருகிலுள்ள நாட்டார்மங்கலத்தில் பறக்கும் படை அலுவலர் ஆர்.ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது லாடபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரால் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 970 மதிப்பிலான ரொக்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபியிடம் ஒப்படைக்கப்பட்டது.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!