பெரம்பலூர். பெரம்பலூர் மாவட்டம் உள்ள குன்னம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மருதமுத்து(42), இவர் வேப்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று இரவு 11 மணியளவில் மது விற்பனை தொகையான இரண்டு லட்சத்து நான்காயிரம் ரூபாயை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அதனை வெளியே வைத்துவிட்டு கடையை பூட்டியுள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பணம் இருந்த பையை திருடிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை பார்த்த மருதமுத்து மர்ம நபரை துரத்தியுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் மது பாட்டிலால் மருதமுத்துவை தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து மருதமுத்து கொடுத்த புகாரின்பேரில் குன்னம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிந்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!